Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Monday, November 14, 2016

  பிளஸ் 2வில் சாதிக்கலாம்; ஆசிரியர்கள் ‘டிப்ஸ்’

  தினமலர்’ நாளிதழ் சார்பில், ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி, அவிநாசி, சந்திர மஹாலில் நேற்று நடைபெற்றது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று மதியம், பிளஸ் அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்களுக்கு ஆசிரியர்கள், ‘டிப்ஸ்’ வழங்கினர். 


  அமிர்தம் (தமிழ்): தமிழில் நிறைய பேருக்கு ‘சென்டம்’ தவறுவதுக்கு காரணம், எழுத்து பிழையே. பெருவினாக்களுக்கு விடையளிக்கும் போது, இரண்டு பத்திகளாக பிரித்து எழுதுங்கள்; திருத்தும் ஆசிரியர்களுக்கு எளிதாக இருக்கும். அனைத்து பாடங்களிலும், ஐந்து மதிப்பெண் வினாக்களை முழுமையாக படித்து வைத்திருக்க வேண்டும். எளிமையாக இருக்க கூடிய பகுதிகளை, முதலில் தேர்ந்தெடுத்து படியுங்கள்.

  ஆங்கிலம் இரண்டாம் தாளை, எளிதாக கருத வேண்டாம். இரண்டாம் தாள், ‘கிரியேடிவிட்டி’யானது; யோசிக்க வைக்கும். தெரிந்த கட்டுரைகளை முதலில் எழுத வேண்டும். கட்டுரை சுருக்கும் பகுதியில், ‘ரப் டிராப்ட்’ பகுதியை அடித்தால் மட்டுமே, அதற்கு முழு மதிப்பெண் கிடைக்கும். ஆங்கில தேர்வில் பலரும் ‘கேப்ஸ்’, ‘ஸ்மால்’ எழுத்துக்களை மாற்றியெழுதி, தவறு செய்யக்கூடாது.

  மரகதவித்யா (கணிதம்): கணிதத்தில் நீங்கள் சென்டம் பெறுவதை உறுதி செய்வது, ஒரு மதிப்பெண் வினா; இதில் தவறு செய்தால், அதிகளவில் மதிப்பெண்ணை இழக்க நேரிடும். புத்தகத்தில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களையும் படிக்க வேண்டும். ஒரு நாளைக்கு, 20 ஒரு மதிப்பெண் வினாவை படிக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள்.

  இரண்டாவது பகுதியிலிருந்து இரண்டு பத்து மதிப்பெண் வினா, கட்டாயம் இடம் பெறும். மனப்பாடம் செய்வது, கணக்கு தேர்வில் பலன் தராது; கணக்கை திரும்பத் திரும்ப போட்டு பார்த்து, பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ‘பார்முலா’ தெரிந்தால், அந்த வினாவை முதலில் எழுதி முடித்துவிடுங்கள். சரியான பயிற்சி இருந்தால், கணிதத்தில் ‘சென்டம்’ வாங்கலாம்.

  மாலா (வணிகவியல், அக்கவுன்டன்ஸி): ‘ப்ளூபிரின்ட்’டை முழுமையாக படித்து, எந்த பகுதியில் இருந்து எத்தகைய கேள்வி கேட்கப்படும்; எத்தனை மதிப்பெண்ணுக்கு பதிலளிக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப தயாராக வேண்டும். 

  வணிகவியலில் அதிகமாக எழுத வேண்டியிருக்கும்; எனவே, நேர மேலாண்மையை பின்பற்ற வேண்டியது அவசியம். வினாத்தாளை படித்த முடித்த பின் விரைவாக எழுத துவங்குங்கள்; ஒரு மதிப்பெண் வினாவில், நேரத்தை வீணடிக்க வேண்டாம். கட்டுரை வினாவை அழகு படுத்த வேண்டியது அவசியம்.

  அக்கவுன்டன்ஸியில், தெரியாத கணக்கை போட்டு குழப்ப வேண்டாம். ஒரு கணக்கை துவங்கி ‘டேலி’யாகவில்லையேனில், அதனை விட்டுவிட்டு அடுத்ததற்கு செல்லுங்கள். ஏதேனும் ஒரு இடத்தில் தவறு செய்து விட்டால், அதனை பென்சிலில் அடித்து விடுங்கள். ‘ஓவர் ரைட்டிங்’ செய்து, உங்களுக்கான மதிப்பெண்ணை குறைத்து விடாதீர். 15 நிமிடம் முன்பாக தேர்வை முடித்து விட்டு, கணக்குகளில் கூட்டல், கழித்தல் சரியாக முடித்துள்ளோமா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

  ராஜேஸ்வரி (இயற்பியல்): இயற்பியல் பாடம் இரண்டு மற்றும் ஏழில் இருந்து, பத்து மதிப்பெண் வினா கேட்கப்படாமாட்டாது. அவற்றில் இருந்து பிற வினாக்களை படித்தால் மட்டும் போதும். ஒன்று, நான்கு, ஆறு மற்றும் எட்டு பகுதியில் இருந்து, அதிக கேள்விகள் கேட்கப்படும். 

  மூன்று மதிப்பெண் வினாக்களை எழுதும் போது கவனம் தேவை. ‘பார்முலா’, சமன்பாடு எழுத வேண்டியிருப்பின் தவறாமல் எழுத வேண்டும். ஒரு கேள்வி அல்லது கணக்கு முழுமையாக எழுத தெரிந்தால், வேகமாக எழுதுங்கள். தெரியாதவற்றை வைத்துக் கொண்டு நேரத்தை வீணாடிக்க வேண்டாம்.

  சங்கீதா (பொருளியல்): பொருளியலில் வரிக்குவரி படித்தால், ஒரு மதிப்பெண் வினாக்களில் முழு மதிப்பெண் பெற முடியும். ஒவ்வொரு பத்தியில் இருந்து, முக்கிய குறிப்புகளை தனியே தொகுத்து அதனை படியுங்கள். ஒன்று முதல் ஏழு வரையிலான பகுதியில் இருந்து கட்டாயம் மூன்று மதிப்பெண் வினா அதிகளவில் வரும். மூன்று மணி நேரத்தில், 20 மதிப்பெண் விடை எழுத மட்டும் ஒரு மணி நேரம் வேண்டும்.

  புத்தகத்தில் உள்ள படங்களை அடிக்கடி வரைந்து பாருங்கள். நேரத்தை பொறுத்து, படம் வரை வேண்டிய கேள்விகளை தேர்வு செய்யுங்கள். குறைந்த நேரத்தை படத்தை அழக வரைந்து விடை எழுத முடியும் என தெரிந்தால் தேர்வு செய்து எழுத துவங்குங்கள். ‘பார்முலா’வுக்கு தனி பாக்ஸ் போடுங்கள்.

  தேவவிரதன் (கம்ப்யூட்டர் சயின்ஸ்): கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ‘சென்டம்’ பெற வேண்டுமெனில், 75 ஒரு மதிப்பெண் வினாவை முழுமையாத எழுத, பயிற்சி எடுக்க வேண்டும். 76, முதல், 100 வரையிலான, 25 கேள்விகளில், 20 கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதினால் போதுமானது. 100 முதல், 110 வரையிலான, பத்து கேள்விகளில், ஏழு மட்டுமே எழுத வேண்டும். 

  புத்தகத்தையே முழுமையாக படிக்க வேண்டும். கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்க வேண்டும். உங்களுக்கு தெரியும் என்பதற்காக, அதிகமாக எழுதி, விடைத்தாள் திருத்துவோரின் நேரத்தை வீணாடிக்க வேண்டாம். ஓ.எம்.ஆர்., ஷீட்டில், துவக்கத்தில் என்ன ‘ஷேடிங்’ கொடுக்கிறோமோ, கடைசி வரை, அதையே பின்பற்ற வேண்டும்.

  சித்ரா தேவி, (தாவரவியல்): தாவரவியல் - விலங்கியல் என்று குழப்பி கொள்ளக்கூடாது. பலரும், பதிலை மாற்றி எழுதி வைத்து விடுகின்றனர். தாவரவியல் புத்தகத்தில் பகுதி இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஆறு ஆகியவற்றை முழுமையாக படித்தால், 60 மதிப்பெண் பெற முடியும். புத்தகத்தில் உள்ள படங்களை வரைந்தால் போதும்; கைடில் உள்ள படங்களை, மாறுபட்டிருக்க வாய்ப்புண்டு.

  அழகு பார்த்து தான் வரைய வேண்டும் என்றில்லை. தாவரவியலில் ‘கீ வேர்டு’ முக்கியம். சென்டம்’ எண்ணிக்கையை குறைக்க, நான்கு ஒரு மதிப்பெண் வினா, புத்தகத்துக்கு உள்ளிருந்து கேட்கப்படும். தெரியாத வினாவை முதலில் பார்த்து, நம்பிக்கை இழக்க வேண்டாம்.

  முருகானந்தம், (வேதியியல்): கனிம வேதியியல், இயற்வேதியியல் என, தலைப்புகளை தேர்வு செய்து, எளிதானதை முதலில் படிக்க வேண்டும். எந்த பகுதியில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்படும் என்பதை தெரிந்திருப்பது அவசியம். இப்போது, இருந்து படிக்க துவங்கினாலே, 180 மதிப்பெண்களை பெறலாம். 

  கட்டாய வினாக்களை, தவிர்க்காமல் எழுத வேண்டும். வேதியியலில் சமன்பாடு அதிகளவில் இருப்பதால், ஒரு தடவை படித்ததை விட, பலமுறை எழுதி பார்த்தால் மட்டுமே நினைவில் இருக்கும். பத்து மதிப்பெண், ஒரு மதிப்பெண் வினாவில் கூடுதல் கவனம் செலு<த்தினால், நல்ல மதிப்பெண் பெற முடியும்.

  No comments: