பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார். பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான, வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ள நிலையில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட வாரியாக அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அதில், 'அனைத்து அரசு பள்ளி மாணவர்களும், பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், பாடங்களை முடிக்க வேண்டும். வாராந்திர தேர்வுகள் நடத்தி, மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து, சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற, சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். 'பெற்றோரை அழைத்து, வீட்டில் மாணவர்களை படிக்க வைக்க அறிவுறுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment