Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, November 9, 2016

    'நெட்' தேர்வு விண்ணப்பம் : நவ., 15ல் முடியுது அவகாசம்

    பேராசிரியர் பணி தகுதிக்கான, 'நெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மத்திய அரசின் உதவித்தொகையில், பல்கலைகள், கல்லுாரிகளில் முழுநேர ஆராய்ச்சி மாணவராக சேரவும், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். 


    ஆண்டுக்கு இரு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், அடுத்த தேர்வு, ஜன., 22ல் நடக்கிறது. அதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, அக்., 15ல் துவங்கியது. விண்ணப்பிக்கும் அவகாசம், நவ., 15ல் முடிகிறது. இதற்கு, ஒரு வாரமே உள்ளது. ஜூலையில் நடந்த, 'நெட்' தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகாததால், பட்டதாரிகள் பலர், அடுத்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதா; வேண்டாமா என, குழப்பத்தில் உள்ளனர். 'இந்த வார இறுதிக்குள், தேர்வு முடிவு வெளியாகும்' என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

    No comments: