மூன்று ஒன்றியங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது. ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி ஒன்றியங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, எளிமையான செயல்வழி கற்றல் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. ஆர்.கே.பேட்டையில் நடந்த இந்த பயிற்சியில், மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் கலந்து கொண்டு, பயிற்சியின் நுட்பங்களை ஆசிரியர்களுக்கு விளக்கினார்.
உ.தொ.க., அலுவலர்கள் அரங்கன், மோகன், கவுடா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி ஒன்றியங்களைச் சேர்ந்த, 60 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
எளிமையாக்கப்பட்ட செயல்வழி கற்றல் முறை குறித்த பயிற்சி, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் அனுபவம் இனிமையாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment