இடைத்தேர்தலை முன்னிட்டு, ஊழியர் நியமன நேர்முகத் தேர்வை, மின் வாரியம் ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரியம் விடுத்த செய்திக் குறிப்பு:
காலி பணியிடமாக உள்ள, 25 சுருக்கெழுத்து தட்டச்சர், 25 இளநிலை தணிக்கையாளர், 50 உதவி வரைவாளர் பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு, நவ., 2, 4, 5, 7ம் தேதிகளில் நடக்கும் என, இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலுக்கான நடத்தை விதி அமலில் உள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. புதிய தேதி, 19ம் தேதிக்கு பின் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம், கடந்த, 17ல் அறிவித்தது. அன்று முதல், மூன்று மாவட்டங்களிலும் நடத்தை விதி அமலுக்கு வந்தது.
ஆனால், மின் வாரியம், நேர்முகத் தேர்வு அறிவிப்பை, நேற்று முன்தினம் தான் வெளியிட்டது. திடீரென தேர்தலை காரணம் காட்டி, நேற்று தேர்வை ஒத்திவைத்து உள்ளது.
No comments:
Post a Comment