சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரககல் பிரச்சனையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.
காரட், பாகற்காய், இளநீர்: இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
வாழைப்பழம், எலுமிச்சை: இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.
அன்னாச்சி பழம்: இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்: கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.
உப்பு: உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment