Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, October 28, 2016

    ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எதிர்பார்ப்பு

    'பணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழகத்தில், 2011ல், ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது. இதன்படி, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, அரசு உத்தரவிட்டது.


    அரசு உதவிபெறும் பள்ளி கள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 2011க்கு பின் நியமனம் செய்யப்பட்டவர்களும், ஆசிரியர் தகுதித்தேர்வை முடிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம், வரும் நவம்பருடன் முடிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில், இட ஒதுக்கீடு சலுகை வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதனால், புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. அடுத்த மாதத்தில் அவகாசம் முடிவதால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தங்கள் வேலை பாதிக்கப்படுமோ என, கவலையில் உள்ளனர்.

    இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து, தமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல் வழங்காததால், பல இடங்களில், தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை முடிப்பதற்கான கால அவகாசத்தை, 2020 வரை நீட்டித்து, அரசாணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

    No comments: