தெலுங்கு வழி பள்ளிகளை, ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற, தெலுங்கானா மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை உள்ள தெலுங்கு வழி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதனால், தெலுங்கு வழி பள்ளிகளை, ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற அனுமதிக்கும்படி, பள்ளிகளின் கூட்டமைப்பு, தெலுங்கானா அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, மாணவர்கள் குறைவாக உள்ள தெலுங்கு வழி பள்ளிகள், ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற விண்ணப்பிக்கும்படி, மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment