மத்திய அரசு பணியில் 18 ஆண்டுகள் தற்காலிக பணியிலும், 8ஆண்டுகள் நிரந்தர பணியிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். புதிய ஓய்வூதிய திட்டத்தில் மாத ஓய்வூதியமாக பெறுவது ரூ.770 மட்டுமே. இந்த ஓய்வூதியம் 20, 30 ஆண்டுகள் ஆனாலும் உயராது. இதற்காக CPS தொகையில் 40% (ரூ.1,36,033/-) LIC PENSION FUNDல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனாதைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு முதியோர் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1000/- வழங்கப்படுகிறது. ஆக, புதிய ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அனாதைகளைவிட மோசமான நிலைக்கு இட்டு சென்றுள்ளது. CPSல் உள்ளோரின் தூக்கம் களைவது எப்போது?
திண்டுக்கல் எங்கெல்ஸ்.
No comments:
Post a Comment