இளநிலை தணிக்கையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, ஊழியர்களை நியமிக்க, மின் வாரியம், நேர்முகத் தேர்வு நடத்த உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட, 2,175 காலி பணியிடங்களை நிரப்ப, ஜூலை, ஆக., மாதங்களில், எழுத்துத்தேர்வு நடத்தியது. அதில், கள மற்றும் தொழில்நுட்ப உதவியாளர், 1,425 பணியிடங்கள் தவிர்த்து, மற்ற பதவிகளுக்கான, எழுத்துத்தேர்வு மதிப்பெண் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மூன்று பதவிகளுக்கு, நேர்முகத் தேர்வு தேதியை, மின் வாரியம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 25 டைப்பிஸ்ட் - நவ., 2லும்; 50 - உதவி வரைவாளர், நவ., 4, 5லும்; 25 - உதவி தணிக்கையாளர் பதவிக்கு, நவ., 7லும், நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது. இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், நேர்காணல் நடக்க உள்ளது; இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மற்ற பதவிகளுக்கான நேர்காணல் தேதி, விரைவில் அறிவிக்கப்படும்' என்றார்.
No comments:
Post a Comment