கல்வி சான்றிதழ்கள் மற்றும் கல்வி விருதுகளை டிஜிட்டல் வடிவத்தில் பராமரித்து வைப்பதற்காக, தேசிய கல்வி களஞ்சியம் என்ற டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
டிஜிட்டல் வடிவம்:
பள்ளி, கல்லூரிகளின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் கல்வி விருதுகளை டிஜிட்டல் வடிவத்தில் பராமரித்து வைப்பதற்காக, தேசிய கல்வி களஞ்சியம் என்ற டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
3 மாதங்களில் அமைப்பு:
இன்னும் 3 மாதங்களில், இந்த அமைப்பு உருவாக்கப்படும்.கல்வி சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், இந்த களஞ்சியத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
வேலை அளிக்கும் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான மாணவரின் கல்வி சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை களஞ்சியத்தை அணுகி பரிசோதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதன்மூலம், போலி சான்றிதழ்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment