மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு நடத்தப்படும், இரட்டை தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. கடந்த, 2010 முதல், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு இரண்டு வகையில், ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 1 தொடர விரும்புவோருக்கு, பள்ளி அளவில் மட்டும், 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும். 10ம் வகுப்புக்கு பின், பிற பாடத்திட்டத்தில் சேர விரும்புவோருக்கு, பொது தேர்வு நடத்தப்படும். ஆனால், பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,யில் பொது தேர்வு எழுதியவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தன. இதுகுறித்து, மத்திய அரசு அமைத்த சிறப்புக் குழு ஆய்வு செய்தது. அதில், பள்ளி அளவிலான தேர்வில் தரம் குறைவு என, தெரிய வந்தது. எனவே, பள்ளி அளவிலான தேர்வுக்கு முடிவு கட்ட, தமிழகம் மற்றும் மஹாராஷ்டிர மாநில சி.பி.எஸ்.இ., பள்ளிகள் வலியுறுத்தின. பெரும்பாலான ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகிகளும், பள்ளி அளவிலான தேர்வு வேண்டாம் என, ஆய்வுக் குழுவிடம் தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளி அளவிலான தேர்வை ரத்து செய்ய, மத்திய அரசுக்கான கல்வி ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், அனைத்து மாணவர்களுக்கும், 10ம் வகுப்பில், பொது தேர்வு மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment