கிராமம் எது; நகரம் எது' என, கல்வி அதிகாரி களுக்கு பிரிக்க தெரியாததால், மாணவர்கள் பரிமாற்று திட்டத்தில், சிக்கல் நீடிக்கிறது. மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், தலா ஒரு கிராமத்து பள்ளியும், நகர பள்ளியும், ஒரு குழுவாக இணைக்கப்படுகின்றன.
பள்ளிகளுக்கு சிக்கல் : இதில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, தலா, 20 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கிராம மாணவர்கள், நகரங்களுக்கும்; நகர மாணவர்கள் கிராம பள்ளிகளுக்கும் செல்வர். ஒவ்வொரு குழுவும் தலா எட்டு நாட்கள், மற்றொரு பள்ளி பகுதிக்கு செல்ல வேண்டும். இந்த திட்டத்திற்கு, 'வாங்க பழகலாம், படிக்கலாம்' என, ஆசிரியர்களே பெயர் வைத்துள்ளனர். ஆனால், இந்த திட்டத்தில் கிராமத்தையும், நகரத்தையும் பிரித்து பார்க்க, அதிகாரிகள் குழம்பி உள்ளதால், பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தவிப்பு : ஊராட்சி ஒன்றிய தலைமை அலுவலகம் உள்ள இடம், நகராட்சியாக இருந்தால், அந்த ஊராட்சி ஒன்றிய கிராம பள்ளிகளும், நகர பள்ளிகளாகவே கணக்கிடப்படுகின்றன. ஒன்றிய தலைமை அலுவலகம் உள்ள இடம், பேரூராட்சி அல்லது கிராம ஊராட்சியாக இருந்தால், ஒன்றிய நகர பள்ளிகள் உட்பட அனைத்தும், கிராம பள்ளிகளாக கருதப்படுகின்றன.இதனால், பல கிராமத்து பள்ளி மாணவர்கள், நகர மாணவர்களாக கருதி, மற்றொரு கிராமத்திற்கே அனுப்பப்படும் நிலை உள்ளது. இந்த குழப்பத்தை ஏற்படுத்திய அதிகாரிகளுக்கு, நடைமுறை சிக்கலை புரிய வைக்க முடியாமல், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
No comments:
Post a Comment