மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் முதல் முதல்வராக இருந்த ஸ்ரீபதியின் மகள் சுமதி, தென் ஆப்பிரிக்க யூனிக் பல்கலையில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மதுரை வந்த அவர் மன்னர் கல்லுாரி ஆங்கிலத்துறை பேராசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர் பேசியதாவது:
இந்திய மாணவர்களின் ஒழுக்கத்தை வேறு நாடுகளில் காண முடியாது. வகுப்பறையில் மாணவர்கள் ஒரு பகுதியிலும், மாணவியர் மறுபுறத்திலும் அமர்ந்து பாடங்களை கவனிக்கின்றனர். இம்முறையை அங்கு நடைமுறைப்படுத்த முயற்சித்து வருகிறேன். ஜாம்பியா, மாலத்தீவுகளில் மாணவர்கள் பலர் 8ம் வகுப்பு வரைதான் படிக்கின்றனர்.
பின்பு வேலைக்கு சென்றுவிடுகின்றனர். சிங்கப்பூர், ஜப்பானில் தாய் மொழிக்கல்விக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வகுப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்கின்றனர். மற்ற நாடுகளிலுள்ள இளைஞர்களை விட இந்திய இளைஞர்கள் ஆயிரம் மடங்கு திறமையானவர்கள்.
தாய்மொழியுடன் தேச மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை தினமும் வாசிக்க வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment