அரசு இ - சேவை மையங்களில், உடனுக்குடன் புகைப்படம் எடுத்து, வினியோகிக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைக்கு, மவுசு அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில், 1.67 லட்சத்திற்கும் அதிகமானோர், அவற்றை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டைகளில், புகைப்படங்கள் சரியாக இடம் பெறுவதில்லை. அசல் தோற்றத்திற்கு தொடர்பு இல்லாமல் இருப்பதாக புகார் கூறப்படுகிறது. அதனால், அந்த புகைப்படத்தை மாற்ற உதவும் வகையில், இ - சேவை மையங்களில், தெளிவான புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அட்டை வழங்கும் திட்டம், இந்த மாதம் அறிமுகமானது. அதற்கு, துவக்க நாளில் இருந்தே ஆதரவு அதிகரித்தபடி உள்ளது. நான்கு வாரங்களுக்குள், 300 மையங்களில், ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து, 409 பேர், அழகான அட்டைகளை பெற்றுள்ளனர். அதேபோல், 'எல்காட்' என்ற, தமிழக மின்னணு நிறுவனம் நடத்தும் மையங்களில், 24 ஆயிரம் பேருக்கு, புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment