மதுரையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செயற்குழுக் கூட்டம் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
செயலாளர் பிரபாகரன், சட்ட செயலாளர் வெங்கடேஷன், பொருளாளர் வெற்றிசெல்வன், அமைப்பு செயலாளர் பிரபா உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டப் பயிற்சிகள் அளிக்க வேண்டும். தீபாவளிக்கு முன் ஆசிரியர் அகவிலைப் படியை உயர்த்தி வழங்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக வினா வங்கி புத்தகங்கள் மாணவர்களுக்கு விரைவில் வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment