அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள பி.டெக்., இடங்களை சிறப்பு அனுமதி பெற்று நிரப்ப வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், ஆயிரத்து 350 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் பல் மருத்துவ இடங்கள் உள்ளது. இதில் 117 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
முந்தைய கவுன்சிலிங்கில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் இடம் கிடைக்காமல் பொறியியல் படிப்பை தேர்வு செய்த மாணவர்கள் கடந்த 6ம் தேதி நடைபெற்ற சிறப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்று எம்.பி.பி.எஸ்.,இடங்களை தேர்வு செய்தனர்.
இதனால் புதுச்சேரி பொறியியல் கல்லூரி மற்றும் காரைக்காலில் உள்ள காமராஜர் கல்லூரியிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட பொறியியல் படிப்பு இடங்கள் காலியாக உள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று அகில இந்திய பொறியியல் கவுன்சிலும், செப்டம்பர் 30ம் தேதிக்குள் மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது.
ஆனாலும், பல மாநிலங்கள் சிறப்பு அனுமதி பெற்று மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் உள்ள காலி இடங்களை தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பி வருகிறது.
அந்தவகையில் புதுச்சேரி அரசும் சிறப்பு அனுமதி பெற்று மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment