தஞ்சையில், தமிழ்நாடு அரசு அலுவலர் கழக மாநில தலைவர் சவுந்தரராஜன் அளித்த பேட்டி: வரும் தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் அரசு அலுவலர்களுக்கு அக்டோபர் மாத ஊதியத்தை 25ம் தேதியே வழங்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அக்டோபர் மாத ஊதியத்தை வரும் 25ம் தேதி வழங்க உத்தரவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment