தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4-ம் தொடங்கியது. முக்கியப் படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. இன்று, இயற்பியல், பொருளாதாரம் பாடத்துடன் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவடைக்கின்றது. மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4-ம் முதல் ஏப்ரல் 22-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் சற்று கடுமையாக இருந்ததாக மாணவர்களிடையே பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வேதியியல் பாடத்துக்கு மட்டும் 6 மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மே முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment