இயக்கவியலை கற்பிக்கக் கூடிய இயற்பியல் பாடத்தை படிக்கும் போதே பல மாணவர்களுக்கு இதயமும், மூளையும் படபடவென துடித்து இயங்கும். கடினமான பொருளை இலகுவாக இயக்குவதற்கான அடிப்படையை வகுத்துள்ள இயற்பியல் பாடத்தை மிகவும் எளிமையான முறையில் படிப்பதன் மூலம், பொதுத் தேர்வில் சாதிக்க இயலும். இயற்பியல் பாடத்தில் செயல்முறைத் தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
மீதியுள்ள 150 மதிப்பெண்களுக்கு ஒரு மதிப்பெண் வினாக்கள் 30; மூன்று மதிப்பெண் வினாக்கள் 15; ஐந்து மதிப் பெண் வினாக்கள் 7; பத்து மதிப்பெண் வினாக்கள் 4 என கேள்வித் தாளில் கேட்கப்படும்.
30 மதிப்பெண் உங்கள் கையில்
ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு முதல் வால்யூமில் இருந்து 66 கேள்வி களையும், இரண்டாம் வால்யூமில் இருந்து 68 கேள்விகளையும் நன்றாக படித்துக்கொள்ள வேண்டும். புத்த கத்தில் ஒவ்வொரு பாடத்தின் பின் பகுதியில் இருந்தும் 15 கேள்விகள் கேட்கப்படுகின்றன. மீதி 12 கேள்விகள் பிடிஏ மூலம் வெளியிடப்பட்ட புத்த கத்தில் இருந்தும், மூன்று மதிப் பெண்கள் மாணவர்களின் சிந்த னையை பரிசோதிக்கும் விதமாக பாடப் புத்தகத்தில் இருந்தும் கேட்கப் படுகின்றன. இவ்வாறு இயற்பியல் பாடத்தை பிரித்து படிப்பதன் மூலம் 30 மதிப்பெண்களையும் முழுவதுமாக அள்ளலாம்.
3 மதிப்பெண் வினாவை படிக்க முத்தான வழி
மூன்று மதிப்பெண் வினாக்களை பொருத்தவரை 15 தியரி கேள்விகளும், ஐந்து கேள்விகள் கணக்கு வகை (problem) சார்ந்தும் இருக்கும். இதில் அதிகபட்சமாக 9-வது பாடத்தில் 4 தேற்றம், 3 தியரியும் ஒரு கணக்கு வகை யும் வரும். 2-வது பாடத்தில் 2 தியரியும், ஒரு கணக்கும் வரும். பாடங்கள் 1, 4, 5, 6, 8 ஆகியவற்றில் இருந்து 2 கேள்வி யும், 3, 7, 10 பாடங்களில் இருந்து ஒரு கேள்வியும் கேட்கப்படும். புத்தகத் தில் உள்ள 3 மதிப்பெண் கணக்குகளை நன்கு படித்துக்கொள்ள வேண்டும்.
ஐந்து மதிப்பெண்களை அள்ள எளிய முறை
ஐந்து மதிப்பெண் கேள்வியில் மொத்தம் 12 வினாக்களில் ஏழு கேள்வி களுக்கு பதில் அளிக்க வேண்டும். இதில் ஆறு தியரி கேள்விக்கும், கட்டாயமாக ஒரு கணக்கு (problem) வினாவுக்கும் பதில் எழுத வேண்டும். பழைய வினாத் தாளை ஆய்வு செய்யும் போது, ஒரு கேள்வி புத்தகத்தின் பின்புறம் உள்ள எ.கா. பகுதியில் இருந்தும், மற்றொரு கேள்வி புத்தகத் தின் பின்புறம் உள்ள பயிற்சி கணக்கில் இருந்தும் கேட்கப்படுவதை அறிய முடிகிறது. எனவே, புத்தகத்தில் உள்ள அனைத்து ஐந்து மதிப்பெண் வினாக்களையும் ஒரு முறை பார்த்துக் கொள்வது நன்று. புத்தகத்தில் உள்ள உதாரண கணக்குகளை நன்கு படித் துக் கொள்வதால், கட்டாயமாக (compulsory problem) எழுத வேண்டிய கணக்குகளுக்கான ஐந்து மதிப்பெண் களை எளிய முறையில் பெறலாம். 2-வது பாடத்திலும் 7-வது பாடத்திலும் இரண்டு 5 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படுகிறது. மற்ற பாடங்களில் இருந்து ஒவ்வொரு வினாக்கள் மட்டும் கேட்கப்படும் என்பதை மனதில் கொண்டு படிக்க வேண்டும்.
10 மதிப்பெண் பதற்றமின்றி வினாவுக்கு விடையளிக்கலாம்
பாடப்புத்தகத்தில் 2-வது, 7-வது பாடங்களில் இருந்து 10 மதிப்பெண் வினா கேட்கப்பட மாட்டாது. மற்ற பாடங்களில் இருந்து தலா ஒரு வினா என 8 வினாக்கள் கேட்கப்படும். இவற்றில் 4 வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். 1, 4, 6, 8 ஆகிய 4 பாடங்களை படித்தால் நான்கு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும் என்ற தவறான மனப்போக்கு மாணவ, மாணவியரிடம் நிலவி வருகிறது. ஆனால், 3, 5, 9 ஆகிய பாடங்களில் உள்ள சில முக்கியமான 10 மதிப்பெண் வினாக்களை படிப்பதால், நமக்கு தெரிந்த மிகச்சிறிய கேள்விக்கு விடை அளித்து, முழு மதிப்பெண்களான 40 மதிப்பெண்களையும் பெற இயலும்.
சூட்சமத்தை தெரிந்துகொள்ளுங்கள்
மூன்று மதிப்பெண் வினாக்களில் கேட்கப்படும் ஃபார்முலாக்களை நேரடி யாக எழுத வேண்டும். இதில் ஒரு மதிப்பெண் ஃபார்முலாவுக்கும், ஒரு மதிப்பெண் பிரதியிடுதலுக்கும், ஒரு மதிப்பெண் விடை அலகுக்கு என 3 மதிப்பெண் பிரித்து அளிக்கப்படுகிறது.
ஐந்து மதிப்பெண் வினாவில் நேரடியாக கேட்கப்பட்ட ஃபார்முலாவை கேள்விக்கு ஏற்ற வகையில் மாணவர்கள் மாற்றி அமைத்து எழுத வேண்டும். அதன் பின்னரே பிரதியீடு செய்து, விடை அலகுடன் எழுத வேண்டும்.
இயற்பியலில் குறைந்தபட்சம் 100 மதிப்பெண்களை பெற வேண்டும் என நினைப்பவர்கள் எழுதிய விடையை ஐந்து நிமிடமாவது கட்டாயம் திருப்பி பார்க்க வேண்டும். அப்போது தான் கவனக்குறைவால் செய்த சிறு சிறு பிழைகளை கண்டறிந்து, திருத்தம் செய்துகொண்டு முழு மதிப்பெண் பெற வாய்ப்பாக அமையும். தேர்வை சீரான வேகத்தில் எழுத வேண்டும். படம் தெளிவாக வரைந்து, அதில் உள்ள பாகங்களை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்றே எழுத வேண்டும். உங்களின் கையெழுத்து ஆசிரியர் புரிந்துகொண்டு படிக்கும் வகையில் எழுத வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
இவ்வாறு ஒன்று, மூன்று, ஐந்து மற்றும் 10 மதிப்பெண் வினாக்களை படிக்கும் மாணவ, மாணவியர் எளிய முறையிலான சூட்சுமத்தை தெரிந்து கொண்டு தேர்வுக்கு தயாராவதன் மூலம் 150 மதிப்பெண்களை தவறவிடாமல் பெறலாம்.
‘இனிது இனிது தேர்வு இனிது’ தொடரைப் படித்துப் பயனடைந்து வரும் மாணவர்களுக்காக, ‘தி இந்து’ தமிழ் நாளிதழும் www.plus1plus2.com இணையதளமும் இணைந்து - கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் அளிக்கும் மற்றும் ஒரு வழிகாட்டுதல்...
www.plus1plus2.com என்னும் இந்த இணையதளம், வல்லுநர்களால் தொகுக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்களையும் விடைகளையும் தருகிறது. இந்த கட்டண சேவையை நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் மாணவர்கள் நாளை ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியாகும் விளம்பரத்தைப் பார்க்கவும். அதில் அளிக்கப்படும் எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினால், ஒரு கடவுச் சொல் (password) அனுப்பிவைக்கப்படும். அதன் மூலம் இணைய தளத்தினுள் சென்று மாதிரி வினா- விடைகளைப் படித்துப் பயன் பெறலாம்.
No comments:
Post a Comment