தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இன்று (23.02.2015) மதிப்புமிகு. பள்ளி கல்வித் துறை செயலர், இயக்குநர், SSA மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் ஆகியோர்களை மாநிலத் தலைவர் கே.சம்பத் தலைமையில் சந்தித்து, கோரிக்கைகளை அளித்தனர். மாநிலப் பொதுச்செயலாளர் ஜெ.ரவி , மாநிலப் பொருளாளர் கி.கார்த்திகேசன், மாநில இணைச் செயலாளர் அ.பாலாஜி, மாநில செற்குழு உறுப்பினர் சி.ஜான்கென்னடி, சென்னை மாவட்ட தலைவர் சி.முருகன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் D.மீகாவேல், திருவள்ளூர் மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.இராமசாமி
மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரும் உடன் இருந்தனர். கடமையை செவ்வனே ஆற்றி, விதிகளுக்குட்பட்டு உரிமைகளுக்கு போராடும், ஆசிரியர்பயிற்றுநர்களின் நலனுக்காக செயல்படும் நமது சங்கத்தின் கோரிக்கைகளுக்கு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
1 comment:
ஏற்கப்பட்ட கோரிக்கைகளுக்கு
‘www.tntamilkalvi.blogspot.in’ பார்க்கவும்
Post a Comment