கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ’சீட்’ ஒதுக்க லஞ்சம் கேட்ட, பிளாக் கல்வி அதிகாரியை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீசைத்தன்யா டெக்னோ பள்ளியில், ஜெயசீலா என்பவர் தன் மகளுக்கு, கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சீட் ஒதுக்குமாறு, கே.ஆர்.,புரம் பிளாக் கல்வி அதிகாரி, ஹேமந்த் பூஜாரியை அணுகினார். இதற்கு ஒப்புக் கொண்ட ஹேமந்த் பூஜாரி, ஜெயசீலாவின் ஜாதி சான்றிதழ் தருமாறும், சீட் ஒதுக்க 25 ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளார்.
இதில், முன்பணமாக, 4,000 ரூபாய் பெற்று கொண்ட ஹேமந்த், பாக்கி பணத்தை, 23ம் தேதி, பெலந்தூர் ரயில்வே ஸ்டேஷனில் வந்து கொடுக்குமாறு தெரிவித்தார். இதை தொடர்ந்து, ஜெயசீலா, லோக் ஆயுக்தா போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, போலீசாரின் யோசனைப்படி, ஹேமந்திடம், ஜெயசீலா பணம் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லோக் ஆயுக்தா போலீசார், ஹேமந்தை, கையும், களவுமாக பிடித்தனர்.
No comments:
Post a Comment