மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மார்ச் 8-இல் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 8-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஆசிரியர் சங்கங்களும் முடிவு செய்தன. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பேச்சு நடத்த தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். ஆனால், முதல்வரைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, திட்டமிட்டபடி மார்ச் 8-இல் போராட்டம் நடத்தவுள்ளனர்.
No comments:
Post a Comment