சென்னையில் மார்ச் 8-ம் தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று ஆசிரியர் அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு நிர்வாகிகள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.
''பேச்சுவார்த்தைக்கு அழைத்த முதல்வர் 3 மணிநேரம் காக்க வைத்தார். 3 மணிநேரம் காக்க வைத்ததால் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை. பேச்சுவார்த்தையை புறக்கணித்து திட்டமிட்டபடி மார்ச் 8-ல் கோரிக்கை பேரணி நடத்த உள்ளோம். சென்னையில் கோட்டையை நோக்கி எங்கள் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழகத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்த உள்ளோம்'' என்று தெரிவித்தனர்.
இந்தப் பேரணியில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் இயக்கங்களும் பங்கேற்க உள்ளன.
No comments:
Post a Comment