தொடக்க கல்வி இயக்குனரகம் மாவட்ட
தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தொடக்கக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளிகள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 31.8.2014 தேதியில் உள்ளவாறு மாணவர்கள், ஆசிரியர்கள் விவரங்களை வரும் 25-ந் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
ஆகஸ்டு மாதத்திற்குரிய பள்ளிக்கூட
மாதாந்திர அறிக்கை அடிப்படையில்
மாணவர்கள் விவரம் பூர்த்தி செய்யப்பட
வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில
வழி மாணவர்களை அந்தந்த
வகுப்புகளுக்கு மொத்தமாக
கணக்கிட்டு வகுப்பு வாரியாக அளிக்க
வேண்டும். இவ்வாறு அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வுக்கூட்டங்களில் பெறப்படும்
விவரத்தின் அடிப்படையில் உபரியாக
உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம்
ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியிட
மாற்றம் செய்யப்படுவார்கள்
என்று கல்வி அதிகாரி ஒருவர்.
No comments:
Post a Comment