மத்திய அரசும், மாநில அரசும் கல்விக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆரம்ப கல்வியாக இருந்து வருகிறது. ஒருகாலத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் ஆரம்பப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளிகள் இருந்தன. இன்றைக்கு பள்ளிகள் இல்லாத குக்கிராமங்களே இல்லை என்ற நிலை உள்ளது. ஒரு சில ஆசிரியர்கள் ஏதோ கடமைக்காக வேலைக்கு வந்தோம். மாதம் பிறந்தால் சம்பளம் பெற்றுக் கொள்கிறோம் என்ற நினைப்புடன் தான் வேலைக்கு வருகின்றனர். அரசு கட்டாயக்கல்வி திட்டம் கொண்டு வந்தும், ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளித்தும், தரமான மாணவர்களை உருவாக்குவதில் அக்கறை காட்டுவதில்லை.
குறிப்பாக அரசு ஆரம்ப பள்ளியிலோ அல்லது துவக்கப்பள்ளியிலோ எந்த ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர்களும் தங்களது பிள்ளைகளை படிக்கவைப்பதில்லை. ஏனென்றால் அரசுப்பள்ளிகள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை. ஆனால் அரசு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு அரசு மூலமாக போதிய அளவிற்கு சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஆசிரியர்கள் அரசு தரும் கல்வி திட்டங்களை மாணவர்களிடத்திலும், அவர்களது பெற்றோர்களிடத்திலும் எடுத்துக்கூறி அரசு ஆரம்ப பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வலியுறுத்தி எந்த ஒரு பிரசாரத்திலும் ஈடுபடுவதில்லை. பதிலுக்கு அரசிடம் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கான போராட்டத்தையே நடத்துகின்றனர்.
ஒருவன் எந்த ஒரு உயரிய பதவியை அடைந்திருந்தாலும் அவன் கண்முன் முதலில் தெரிவது ஆரம்ப கல்வியை போதித்த ஆசிரியர் தான். ஆனால் இன்றைக்கு அரசுப்பள்ளிகளில் கல்வி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு காரணம் சில பள்ளிகளில் மாணவர்களுக்கேற்ற ஆசிரியர்கள் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்கள் பள்ளிக்கு வந்து பாடம் கற்பிக்காமல் தங்களது சொந்தவேலைகளை தான் கவனிக்கின்றனர். சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் எண்ணிக்கை தான் அதிகம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாறுதல் உண்டு என்ற நிலை இருந்தும், இன்றைக்கு பலர் ஒரே பகுதியில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதோடு தங்கள் ஆதிக்கத்தையும் செலுத்தி வருகின்றனர்.
பெம்பாலன ஆசிரியர்கள் காலத்தேடு பள்ளிக்கு வருவதில்லை. ஒரு சில ஆசிரியர்கள் பினாமியாக சிலரை நியமித்து பாடம் நடத்திய சம்பவமும் பல இடங்களில் நடந்துள்ளது.
கல்வி போதிக்க வேண்டிய ஆசிரியர்களில் ஒரு சிலர் பள்ளியில் படிக்கும் சிறுமிகளிடம் சில்மிஷம், கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி, ரியல் எஸ்டேட் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதோடு, அதன்மூலம் ஒரு வருவாயை ஈட்டி வருகின்றனர்.
ஆசிரியர்களின் இதுபோன்ற நடவடிக்கையால் பெற்றோர்கள் ஆரம்ப பள்ளியின் மீதும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மீதும் கொண்டுள்ள அவநம்பிக்கையால் தங்கள் பிள்ளைகளை ஆரம்ப பள்ளியில் சேர்க்க மறுப்பதோடு பணம் போனால் பரவாயில்லை. தங்கள் பிள்ளைகளின் மானமும், பாதுகாப்பும் தான் முக்கியம் என்று கருதி தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். ஆசிரியர்களின் இதுபோன்ற செயல்களுக்கு சில சங்கங்களும் அவர்களை கண்டிக்காமலும், அறிவுரைகள் வழங்காமலும் அவர்களின் செயல்களுக்கு உடன்பட்டு அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையிலே ஈடுபடுகின்றனர்.
ஆசிரியர் பணி அறப்பணி. அதற்கு உன்னை அர்ப்பணி என்பார்கள். இன்றைக்கு ஆசிரியர்கள் பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொள்வது என்பது அரிதாக உள்ளது. ஆரம்ப கல்வி முதல் நடுநிலைக்கல்வி வரை 1முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் உள்ளதால் ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் பாடம் நடத்தி தான் ஆகவேண்டும் என்று பொறுப்பு இல்லாமல் போய்விட்டது. ஆரம்ப கல்வி, நடுநிலைக்கல்வியில் முழுமையாக கட்டாய தேர்ச்சி பெற்று விடுவதால் அவர்கள் உயர்கல்வியிலும், மேல்நிலைக்கல்வியிலும் களிமண்ணாக வந்த மாணவர்களை சிற்பமாக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அரசு நடத்தும் தேர்வான 10ம்வகுப்பு, 12ம் வகுப்பு வகுப்பிலும் தேர்ச்சி சதவிகிதம் அரசுப்பள்ளிகளில் சரிபாதியாக குறைவதோடு அவர்களின் ஒழுக்க நடவடிக்கையும் பின்னுக்கு தள்ளப்படுகிறது.
ஆனால் உயர்நிலைக்கல்வியிலும், மேல்நிலைக்கல்வியிலும் தேர்ச்சி சதவிகிதம் குறைந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும், தலைமையாசிரியர் மீதும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்டால் ஆரம்ப கல்வி நன்றாக இருக்கும். ஆரம்ப பள்ளியில் இருந்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் முழுதேர்ச்சி சதவிகிதமும் அதிகரிப்பதோடு மாணவர்களும் நல்வழிப்படுத்தப்படுவார்கள். ஒழுக்கத்தையும், ஆரம்ப கல்வியை கற்கும் வயதில் அதனை கற்காததால் அவர்கள் மேல்நிலைக்கல்வியில் திணறுவதோடு அவர்கள் பணிக்கு செல்லும் வரை பாதிப்பு ஏற்படுகிறது.
பொதுவாக ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு ஒரு மனிதனுக்கு ஆரம்ப கல்வி முக்கியம். அதனை முறையாக கற்கவில்லை என்றால் அவர்கள் மேல்நிலை படிப்பு பாதிக்கப்படுவதுடன் சமூகவிரோதிகளாக கூட மாற வாய்ப்புள்ளது. ஆரம்ப கல்வியை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் இடைநிற்றல், போதிய கல்வி அறிவு, ஒழுக்கம், முழுமையாக தேர்ச்சி இலக்கை அடைய முடியும்.
SOURCE : http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=427885&cat=504
SOURCE : http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=427885&cat=504
20 comments:
aada theriyathavan medai konaiya irukkunu sonna kathaiya irukku unga katturai
See last year NMMS exam result 71% students passed from middle schools. Only 29% from high school.
சில்மிஷத்தில் ஈடுபடும் விலங்குகள் அதிகமானோர் high/higher secondary school teachers. மனப்பாடக் கல்வியை போதிக்கும் தங்களுக்கு வாழ்க்கை கல்வி போதிக்கும் எங்கள் உழைப்பு ஏளனமாக தான் தெரியும்
இந்த கட்டுரையை அறிவாளி(முட்டாள்) ஆசிரியரும் ஆரம்ப பள்ளி பயின்ற பின்தான் உயர்க்கல்வி பயின்றார் என்பதை மறக்க கூடாது
தரம் தாழ்ந்த கட்டுரை கையாளாகத்தனத்தின் வெளிப்பாடு
மடதனமான சிந்தனை. முட்டாள்தனமான கட்டுரை..
Dont blame all teachers sir
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையர் கோவில் ஆண்டி என்பார்கள், அதுபோல ஆரம்பப் பள்ளி ஆசிரியன் தான் இளைத்தவனா? ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு உண்மையாக பாடம் நடத்தினால் கிராமப் புற மாணவர்களின் நிலை கட்டுரையாளருக்குத் தெரியும்..படிக்காத கிராமப் பெற்றோர் எந்தவித முன்னறிவும் இல்லாத தங்கள் பிள்ளைகளை அரசு ஆரம்பப் பள்ளிகளில் கொண்டு வந்து சேர்க்கின்றனர்..பெரும்பாலான பெற்றோர் ஆங்கில மோகத்தால் தான் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர்.தங்கள் பிள்ளைகள் அங்கே சரியாகப் படிக்கவில்லை என உணரும்போது தான் அரசு ஆரம்பப் பள்ளிகளில் கொண்டுவந்து சேர்க்கின்றனர்.கற்பூரத்தை மட்டும் தான் ஏற்றுவோம் என்பது எளிமையானது..அதனுடன் கரிக்கட்டைகளையும் பச்சை வாழை மட்டைகளையும் பற்ற வைப்பது தான் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணி என்பதை உணரவேண்டும்.. ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மீது இவர் கூறும் குற்றச்சாட்டுகளைப் போல இரு மடங்கு குற்றச்சாட்டுகள் உயர்நிலை,மேநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மீதும் கூறப்படுகிறது.ஒன்றிரண்டு நிகழ்வுகளை பொதுமைப் படுத்தக்கூடாது.கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியக் கூடாது.100 சதவீத தேர்ச்சி படிப்படியாக கண்டிப்பாக நடக்கும் ..டீனேஜில் வரும் மாணவர்க்கு உயர்நிலை,மேநிலைப் பள்ளி ஆசிரியர்கள் நல்ல வழிகாட்டியாக நடந்தாலே வாழைப் பட்டை மாணவனும் கற்பூரமாக மாறுவான் என்பதை உணரவேண்டும்.
ஓசந்த குழந்தைக்கு கூட செய்வதில்லை .... பள்ளி குழந்தைக்கு கால் கூட (சூ....) கழுவும் மகான்கள் நாங்கள்....... உங்களை போல் பள்ளிக்கு வந்தும் பாதிநேரம் ஓய்வும் , மீதிநேரம் சில்மிஸமும் செ ய்யும் xxx சாமியாராக நாங்கள் இல்லை.... பார்த்து எழுதவும்.... நாங்களும் பேனா வைத்துள்ளோம்.....
கட்டுரையாளர் ஒரு வடிகட்டின முட்டாள் என்றே தெரிகிறது....
உன் ஆரம்பபள்ளி ஆசிரியர் உனக்கு சரியாக போதித்ததால் தான் இன்று அந்த ஆரம்பபள்ளி ஆசிரியர் வாய்கிழிய பேசுகிறாய்...
மமதையிலும்,பேதையாக பேசுவதை நிறுத்தி விட்டு மேல்நிலைவகுப்பில் எவ்வளவு கிழித்தாய் என பட்டியலிட்டு காட்டு....
மூடனே நடக்கின்ற பிள்ளையை ஓட வைப்பது எளிது....
தவழ்கின்ற பிள்ளையை தட்டி எழுப்பி படிக்க வைப்பதே கடினம்....
சிறு குழந்தையின் உமிழ்நீரையும் சிறுநீரையும் பொருட்படுத்தாமல் சுத்தம் செய்து பாடம் கற்பிக்கிறோம்...
நாங்கள் சொல்லி கொடுக்கும் பட்டம்,பம்பரம் வார்த்தைக்கு ஈடாகுமா உன் வாசித்து பாடம் நடத்தும் லட்சனம்...
tn kalvi entha katurai velituiruka koodathu. 1 to 8 teachergali avamanam saikeradhu.Muttal than idhu madhri kerukkuvan.
Five minutes kooda rest iladha job neenga free period anubavikringa. Ena therium BTs staff ku. Naanga 1st 2nd 3rd ela class um ella subject um ore teacher eh handle pandrom. Velila irundhu onumvtheriyadhu. Vandhu work pana neenga vera velaike piiduvinga.
மிகச்சரியான கட்டுரை. தொடக்கக்கல்வித்துறை ஆசிரியா்கள் இனியாவது விழித்துக் கொள்வது நல்லது. மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை கேட்கும் இவர்கள் மத்திய அரசுக்கு இணையான தரத்தில் கல்வியை மாணவா்களுக்கு அளிக்க தயாரா?
சரியான நேரத்தில் எழுதப்பட்ட சரியான கட்டுரை. ஆரம்ப கல்வி ஆசிரியர்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது 1)தேவையில்லாமல் சுழற்சி முறையில் விடுப்பு எடுத்தல் கேட்டால் எங்கள் விடுப்பு நாங்கள் எடுக்கிறோம் என்பது. அய்யா விடுப்பு என்பது அவசர அவசியத்திற்காக அளிக்கப்பட்ட ஒரு சலுகை. அதை தேவையே இல்லாமல் அனுமதிக்கபட்ட ஒரே காரணத்திற்காகவே எடுப்பது என்பது மனிதாபிமான மற்ற செயல். 2)ஊதிய உயர்வுக்காக போராடும் நீங்கள் உங்களின் வளமான வாழ்க்கைக்கு காரணமான ஏழை குழந்தைகளின் கல்விக்காகவும் கொஞ்சம் போராடுங்கள்.
தோழர் களே நமக்குள்ளே வீண் விவாதம் வேண்டாம் இந்த நிலை மாறும்.
s . mullainathan said :
you are fool . I am middle school head master . our school stream does our process very well . our cce result and vasippu progress is above 90%. please stop you wrong mentality.
Dear friend,we are facing so many broblems to educate Small children such as irregular Attendance,Parents Careless,lot of other activity of school ,MOODA NAMBIKKAI,PTA & SMC Careless etc...
But You have lot leisure period,teaching single subject,lot of teachers ,Clerk , Head master is also a Drawing offier,your superior mind (You thought you are only brilient),earning tution centre , Business,Three month other activity , no participate social activity ,More Salary , KAKA PIDITHEE VAZHVATHU etc...
இந்த கட்டுரை குறித்து தொடக்க கல்வி ஆசிரியர்கள் உண்மை புரியாமல் கோபம் கொள்கிறார்கள். நானும் ஒரு தொடக்க கல்வி ஆசிரியை என்ற முறையில் இதை சொல்கிறேன். தொடக்க கல்வி பாதாளத்தை நோக்கி அதிவேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதாவது மாணவர் எண்ணிக்கை படு வீழ்ச்சி அடைந்து வருகிறது. சில தொடக்க கல்வி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினாலும் பலர் தங்கள் கடமையை சரியாக செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். பள்ளிக்கு நேரத்திற்கு வராமை, காலதாமதமாக வந்து பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் காலை உண்வு உட்கொள்வது, அதன் பின்பும் பாடம் நடத்தாமல், செல்லில் பேசிக் கொண்டிருப்பது, தொடர் விடுப்பு எடுப்பது, தங்கள் பிள்ளைகள் 10 அல்லது 12 வகுப்பு படித்தால் விடுப்பில் சென்று வடுவது, பள்ளி மாணவர்களை அம்போ என விட்டு விடுவது, மாணவர்களின் பெற்றோர் சரியில்லை, பள்ளிக்கு சரியாக வருவதில்லை, வீட்டில் பெற்றோர் சொல்லி கொடுப்பதில்லை என குறைகூறிக்கொண்டு வந்த மாணவர்களுக்கு என்ன சொல்லி கொடுத்தோம் என சிந்திக்காமல் இருப்பது, 4 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் இருந்தும் ஒரு எழுத்தையும் கற்பிக்காமல் இருப்பது, தேவைக்கு அதிமான ஊதியம் கிடைத்தும் ஊதியம் பற்றவில்லை என கூறுவது, ஏற்கெனவே அதிக ஊதியம் காரணமாக தான் தங்கள் குழந்தைகளை செல்வ சீமான்களாகவும் சீமாட்டிகளாகவும் வளர்க்க கவனம் செலுத்தும் நாம் பள்ளி குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டாமல் இருப்பது என நம் தரப்பில் ஏராளமான குறைகள் உள்ளன. எனவே நாம் நம்மை திருத்திக் கொள்ள வேண்டும்.
dear friend,this following your comments also Apt HIGH & HIGHER SECONDARY SCHOOL.
Post a Comment