சென்னை மாநகராட்சி பள்ளிகளை
சென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன் பேசும்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படக் கூடிய நிலை இருப்பதாகக் கூறினார்.
அப்போது குறுக்கிட்டு அமைச்சர் வேலுமணி கூறியது: சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. அது போல, சென்னை பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாக வரும் செய்திகளும் தவறானவை. சென்னைப் பள்ளிகள் ஒரு நாளும் தனியாரிடம் ஒப்படைக்கப் படாது. இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.
No comments:
Post a Comment