நெட் தகுதி தேர்வுக்கு, 2017 ஜன., 22ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கு, வரும், 17ம் தேதி முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
பல்கலை, கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியில் சேர்வதற்கும், பி.எச்.டி., மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கும், மத்திய கல்வி வாரியத்தால் நெட் தகுதி தேர்வு, ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2017ம் கல்வியாண்டிற்கான தேர்வு, ஜன., 22ம் தேதி நடக்கவுள்ளது.
தேர்வர்கள் வரும், 17ம் தேதி முதல் நவ., 16ம் தேதி வரை, &'ஆன்-லைன்&' மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணங்களை, நவ.,17ம் தேதிக்குள் செலுத்துவது அவசியம். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, டிச., 21ம் தேதி சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த, தெளிவான விபரங்களை சி.பி.எஸ்.இ., இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment