Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 17, 2016

    பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி பிற மாநிலங்களுக்கு இனி இல்லை

    சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை, பிற மாநிலங்களுக்கு வழங்குவதை நிறுத்த, தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், சமச்சீர் கல்வித் திட்டம், 2011ல் அமலுக்கு வந்தது. 


    இதற்கான பாடப் புத்தகங்கள் அச்சடிப்பை, தமிழ்நாடு பாட நுால் கழகம், தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநில அச்சகர்களுக்கு, டெண்டர் மூலம் வழங்கி வந்தது. புத்தக வடிவம் பெரிதாக இருந்ததால், கர்நாடக அச்சகர்கள், தமிழக புத்தகங்களை அச்சடிப்பதை நிறுத்தினர்; பின், ஆந்திரா அச்சகர்கள், அதிக புத்தகங்களை அச்சிட்டனர்.நடப்பு ஆண்டில், வண்ணம் இல்லாத கறுப்பு, வெள்ளை நிறம் உடைய, பிளஸ் 2 புத்தகங்களுக்கு, அச்சுக்கூலி குறைக்கப்பட்டதால், புத்தகங்களை அச்சிட, ஆந்திரா அச்சகர்கள் மறுத்து விட்டனர். அதிர்ச்சி அடைந்த பாட நுால் கழகம், நிலைமையை சமாளிக்க, தமிழக அச்சகர்களின் உதவியை நாடியது. தமிழக அச்சகர்களும், விலையை பற்றி கவலைப்படாமல், மூன்று பருவத்திற்கான புத்தகங்களை அச்சிட்டுள்ளனர்.
    பிற மாநிலங்களில், அந்தந்த மாநில அச்சகர்களுக்கே, பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தரப்படுகிறது. தமிழக புத்தகங்களுக்கு, தமிழக அச்சகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, அச்சகர்கள் கோரி வந்தனர். வெளி மாநிலங்களில் அச்சிட கொடுப்பதால், போக்குவரத்து செலவு அதிகமாவதை உணர்ந்த பாட நுால் கழகமும், பிற மாநிலங்களை விட, தமிழக அச்சகங்களே சிறந்தவை என, முடிவுக்கு வந்துள்ளது.
    இதற்காக, பாடப் புத்தக அச்சடிப்பு குறித்த அரசாணையை திருத்த, ஆலோசனை நடந்து வருகிறது. இது தொடர்பாக, தமிழக அச்சக உரிமையாளர்களை அழைத்து, கல்வித்துறை அதிகாரிகள் விரைவில் பேச்சு நடத்த உள்ளனர்

    No comments: