தமிழக ஹிந்தி ஆசிரியர்கள் நலச் சங்க துவக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில், மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் சுதிர் லோதா பேசியதாவது: தமிழக பள்ளிக்கல்வி திட்டத்தில் பின்பற்றப்படும் மொழி கொள்கையால், சிறுபான்மை மொழிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹிந்தி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. குழந்தைகள் ஹிந்தி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
ஹிந்தி கற்பிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிதி உதவி அளிக்கிறது; அதை, நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஹிந்தி கற்க வழி இல்லாததால், தமிழகத்தின் பெரிய நிறுவனங்களில் வேலைக்கு வர அதிகாரிகள் மறுக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
மாநில சிறுபான்மை மொழிக்கல்வி அமைப்பின் தலைவர், விமல்சந்த் தாரிவால் பேசுகையில், ''தமிழக பள்ளிகளில், தமிழ் தவிர மற்ற மொழிகளை கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது; இது, இந்திய அடிப்படை உரிமைக்கு எதிரானது. வட மாநிலங்களில் உள்ள தமிழர்கள், தமிழக அரசியல்வாதிகள், தங்கள் குழந்தைகளுக்கு ஹிந்தியை கற்பித்து உள்ளனர்,'' என்றார்.அகர்வால் சபாவின் நுாலக தலைவர், ரமேஷ் குப்தா நீரத் பேசுகையில், ''தமிழகத்தில், ஹிந்தி கற்க முடியாத நிலை உள்ளதை, சிறுபான்மையினர் அனைவரும் கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment