பொதுத்தேர்வு மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது.
இதற்காக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடந்த மாதம் காலாண்டு தேர்வு நடந்து முடிந்தது.

மேலும் டிசம்பர் மாதத்திற்குள் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான பாடங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு கற்பித்து முடிக்கவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதியும், பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்காகவும், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் பள்ளி நாட்களில் விடுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பொதுத்தேர்வு வருவதற்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பாடங்களையும், முடித்து, மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்தவேண்டும். முழுப்பாடங்களை கொண்டுதான் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இதை வைத்து மாணவர்களின் தேர்ச்சியை ஓரளவிற்கு அறியமுடியும். இதனால் அரையாண்டு தேர்வு முடிந்தவுடன், நன்கு பாடம் கற்பிக்கும் மாணவர்கள் மற்றும் மெல்ல பாடம் கற்பிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஏற்றார்போல், சிறப்பு பயிற்சிகள் மற்றும் எழுத்து தேர்வுகளை நடத்தப்படும். இதனால் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆசிரியர்கள் அடிக்கடி விடுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது’ என்றனர்.
No comments:
Post a Comment