Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, October 21, 2016

    ’ஆல் பாஸ்’ வேண்டாம்; நிபுணர் குழு பரிந்துரை

    புதிய கல்வி கொள்கையை வகுக்க பரிந்துரைகள் அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, ஆல் பாஸ் என்ற, எட்டாம் வகுப்பு வரையில் அனைவரும் தேர்ச்சி முறையை கைவிட வேண்டும் என, வலியுறுத்தி உள்ளது.


    குறைந்து வரும் திறமை:

    கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும். ஆனால், இந்த முறையால், மாணவர்களின் திறமை குறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    189 பக்க அறிக்கை:

    இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவது குறித்து பரிந்துரைகள் அளிப்பதற்காக, மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

    இந்த துணைக் குழு, பல்வேறு மாநிலங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தி, 189 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது; அதில், ஆல் பாஸ் முறையை கைவிட வேண்டும் என்ற முக்கிய பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

    ஆராய்வு:

    இதற்கிடையே, மாநில பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர்கள் அடங்கிய, மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம், வரும், 25ல் நடக்க உள்ளது; அதில், இந்த பரிந்துரைகள் குறித்து ஆராயப்பட உள்ளது.

    No comments: