'எக்காரணத்தை கொண்டும் பள்ளி வளாகம், கழிப்பறை பகுதிகளை சுத்தம் செய்யும் பணிக்கு மாணவர்களை ஈடுபடுத்த கூடாது' என, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாணவ,- மாணவியர் பள்ளிக்கு வரும்போதும், இடைவேளை நேரம், மதிய உணவு நேரம் மற்றும் பள்ளி முடிந்து வீடு திரும்பிச் செல்லும் போதும், முறையாக கண்காணிக்க ஆசிரியர்களை, சுழற்சி முறையில்நியமிக்க வேண்டும்.
சத்துணவு தயாரிக்கும் போதும், பரிமாறும் போதும் நேரடி கவனம் செலுத்த வேண்டும். தலைமை ஆசிரியர் சுவைத்து பார்த்த பிறகே, மாணவர்களுக்கு பரிமாற வேண்டும். பள்ளி வேளையில் மாணவ மாணவியர், இயற்கை உபாதை, குடிநீர் மற்றும் தின்பண்டம் வாங்க வெளியே செல்லக்கூடாது. மாணவர்கள் இடையே மோதலை தவிர்க்க, கலந்துரையாட வேண்டும். காலையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வருவதற்கு முன்பே, பள்ளிக்கு வர வேண்டும்; மாலையில் மாணவர்கள் பள்ளியை விட்டுச் சென்ற பிறகே, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செல்ல வேண்டும். எக்காரணத்தை கொண்டும் பள்ளி வளாகம், கழிப்பறை பகுதிகளை சுத்தம் செய்யும் பணிக்கு மாணவர்களை ஈடுபடுத்த கூடாது.
பள்ளி நேரத்தில், வெளியாட்களை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது.பத்திரிகை நிருபர்களை, எக்காரணம் கொண்டும், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில், பள்ளி வேலை நேரத்தில் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதியின்றி, பேட்டி கொடுக்கவோ கூடாது. பாடவேளையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மொபைல் போன் பயன்படுத்த கூடாது.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment