மத்திய அரசின் காலி பணியிடங்களுக்கு, தகுதியானவர்களை, 'ஆன்லைன்' மூலம் நியமிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்றதும், அரசு பணிகளில் ஏற்படும் காலதாமதம், பண விரயம் மற்றும் காகித பயன்பாட்டை குறைப்பதற்கும், ஊழலை ஒழிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்கான வழிமுறைகளை கண்டறிய, மத்திய அரசின் அனைத்து துறை செயலர்கள் மற்றும் மாநில தலைமை செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசின் பயிற்சி துறை செயலர் சஞ்சய் கோத்தாரி மற்றும் வெளியுறவு துறை செயலர் ஜெயசங்கர் உட்பட, 12 உறுப்பினர்கள் இந்த குழுவில் உள்ளனர்.
இந்த குழு, தன் பரிந்துரையை, சமீபத்தில் மத்திய அரசிடம் அளித்தது. அதில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது முதல், பணி நியமனம் வரை அனைத்து நடைமுறைகளையும், ஆன்லைனிலேயே மேற்கொள்ளும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது; இந்த பரிந்துரையை பரிசீலித்து, விரைவில் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment