வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், நடப்பு கல்வியாண்டு முதல், ஆங்கில வழிக்கல்வி வகுப்பில், மாணவர்களை சேர்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2016 - 2017ம் கல்வியாண்டு முதல், ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக, 6,7 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் துவங்கப்படுகிறது. இதுகுறித்து, தலைமையாசிரியர் கூறுகையில், நகர் பகுதிகள் மட்டுமின்றி, கிராமங்களிலும், ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்க, பெற்றோர்கள் விரும்புகின்றனர்.
அதனால், இந்த ஆண்டு, 3 வகுப்புகளுக்கு மட்டும் ஆங்கில வழிக்கல்வியில் பாடங்களை துவங்க உள்ளோம். அதற்கு, மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது என்றார்.
No comments:
Post a Comment