பிளஸ் 2 படித்த திருமணம் ஆகாத மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்புடன், ராணுவப் பயிற்சி மற்றும் வேலை என்ற அரிய வாய்ப்பை வழங்குகிறது இந்திய ராணுவம்.
காலிப் பணியிடங்கள்: 90
கல்வித் தகுதி: 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றை முதன்மை பாடமாக பயின்று 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 16.5 முதல் 19.5 ஆண்டுகள் வரை.
தேர்வு முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் ‘சர்வீஸ் செலக்சன் போர்டு’ தேர்வு செய்யப்படுவர். ஒரு நாள் நடைபெறும் முதலாம் தேர்வு நிலையில், உளவியல் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல்கள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
போபால், பெங்களூரு மற்றும் அலகாபாத் ஆகிய இடங்களில் ஐந்து நாட்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். இறுதியாக, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பயிற்சி காலம்: மொத்தம் 5 ஆண்டுகள்.
பயிற்சி நிலைகள்
கயாவில் உள்ள ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமியில், ஓர் ஆண்டு அடிப்படை ராணுவப் பயிற்சி (பேசிக் மிலிட்டரி டிரைனிங்) அளிக்கப்படும்.
தொழில்நுட்ப பயிற்சி:
நிலை 1: (பிரி-கமிஷன் டிரைனிங்) புனேவில் உள்ள இன்ஜினியரிங் மிலிட்டரி காலேஜ் அல்லது செக்கந்தராபாத்தில் உள்ள மிலிட்டரி காலேஜ் ஆப் எலக்ட்ரானிக்கல் அன்ட் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய ஏதேனும் ஒரு ராணுவக் கல்லூரியில் 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும்.
நிலை 2: (போஸ்டு கமிஷன் டிரைனிங்) புனேவில் உள்ள இன்ஜினியரிங் மிலிட்டரி காலேஜ் அல்லது செக்கந்தராபாத்தில் உள்ள மிலிட்டரி காலேஜ் ஆப் எலக்ட்ரானிக்கல் அன்ட் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது மத்திய பிரதேசத்தில் உள்ள மிலிட்டரி காலேஜ் ஆப் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ஆகிய ஏதேனும் ஒரு ராணுவக் கல்லூரியில் ஓர் ஆண்டு பயிற்சி அளிக்கப்படும்.
உதவித்தொகை: மூன்று ஆண்டு பயிற்சிக்கு பிறகு, மாதம் ரூபாய் 21 ஆயிரம். நான்கு ஆண்டு பயிற்சிக்கு பிறகு பதவியைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூபாய் 39,100 வழங்கப்படும். ஐந்து ஆண்டு பயிற்சிக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் ராணுவம் ஏற்றுக் கொள்ளும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30
மேலும் விவரங்களுக்கு: www.joinindianarmy.nic.in
No comments:
Post a Comment