தொடர் மழையால், திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள, 102 கல்லுாரிகளுக்கும் பருவத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவள்ளுவர் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில், கடலுார் மாவட்டத்தில், கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக, பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து கல்லுாரிகளுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலுாரில் உள்ள, தன்னாட்சி கல்லுாரிகளில் மட்டும் பருவத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
No comments:
Post a Comment