நடப்பு கல்வியாண்டில், ஆறு மாதங்கள் ஆகியும், பி.பி.எம்.பி., பள்ளி மாணவர்களுக்கு, ஷூ.,க்கள் வழங்கப்படவில்லை. பிருகத் பெங்களூரு மகாநகர பாலிகே எனப்படும், பி.பி.எம்.பி.,யின், 136 பள்ளிகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளிகளின் மாணவர்களுக்கு, ஷூக்கள் வழங்கும் டெண்டர், லிபர்ட்டி ஷூ லிமிடெட் நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது. இந்நிறுவனம் நிர்ணயித்த நேரத்தில் வினியோகம் செய்யாததால், ஒரு மாதத்துக்குள் வினியோகம் செய்யும்படி, ஏப்., 10ம் தேதி, பி.பி.எம்.பி., கல்வித்துறை, நோட்டீஸ் அனுப்பியது.
இருப்பினும், இதுவரை அந்நிறுவனம், மாணவர்களுக்கு ஷூக்கள் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து அந்தநிறுவனத்தினர் கூறுகையில், மாணவர்களின் ஷூ அளவை அறிய, பள்ளிக்கு சென்றபோது, அட்மிஷன் முடிய வில்லை எனக் கூறி, விவரங்களை தர தாமதம் செய்தனர். இதனால், ஷூ வினியோகம் செய்வதில் தாமதமாகிறது என்றனர்.
No comments:
Post a Comment