மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் பணியாற்றிய பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாறுதல் செய்யப்படுகின்றனர். கடந்த 2012 ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களுக்கு மாநிலம் முழுவதும் 16, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு வாரத்தில் 3 அரைநாட்கள் வீதம், மாதத்தில் 12 அரை நாட்கள் பணியும், மாத சம்பளம் ரூ.5ஆயிரமும் வழங்கப்பட்டது. தற்போது இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.7ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உள்ள பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணிநிரவல் மூலம் இடமாறுதல் வழங்கப்படுகிறது. ஒரு பள்ளியில் 71 மாணவர்களுக்கு கீழ் உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடம் ரத்து செய்யப்பட்டு, அவர் 101 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டு வருகிறார்.
இதனால் பணியிடம் ரத்து செய்யப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஓவியம், உடற்கல்வி, தொழிற்கல்வி பாடங்களில் மாணவர் கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் மாணவர் எண்ணிக்கை குறைந்த 58 பள்ளிகளில் பணியாற்றிய சிறப்பு ஆசிரியர்கள், நிரவல் மூலம் வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment