தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறியதாவது: ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆசிரியர்களின் கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 2003ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு இந்த புதிய பங்களிப்பு ஓய்வு ஊதியத் திட்டம் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பணிக்கொடை இல்லை. ஓய்வு ஊதிய ஒப்பளிப்பு இல்லை. கடன் பெறும் வசதி இல்லை.
குறைந்தபட்ச அதிகபட்ச பணிக்காலம் வரையறுக்கப்படவில்லை. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக இடைநிலை, முதுநிலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அலுவலகங்கள் முன்பு இன்று மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment