ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால், வரும், 13ம் தேதி, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலை, நிறுவனங்கள், மற்றும் அலுவலகங்களுக்கு, ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு, வரும், 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதால், தொகுதிக்குட்பட்ட, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், இதர நிறுவனங்களில் பணிபுரியும், அனைத்து தொழிலாளர்களும், ஓட்டுப்போட ஏதுவாக, ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.
மேலும், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் ஓட்டு உரிமைபெற்று, தொகுதிக்கு வெளியே நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment