Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 4, 2015

    மாணவர்கள் அசல் சான்றிதழ் வழங்குவதிலிருந்து விலக்கு: பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

    ''பாஸ்போர்ட் பெற அசல் கல்வி சான்றிதழ் வழங்குவதில் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,'' என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மணிஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியுள்ளதாவது: விதிகளின்படி பாஸ்போர்ட் பெற அசல் சான்றிதழ்களை பாஸ்போர்ட் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களுக்காக இந்த விதியிலிருந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் விதிவிலக்கு அளித்துள்ளது. அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத போது, சில ஆவணங்களை முக்கியமாக மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் இருப்பதாக பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ், பாஸ்போர்ட் பெற தேவையான அசல் சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல் ( பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் சான்றொப்பத்துடன்), தற்போது பயிலும் கல்வி நிறுவனங்களின் அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதில் சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்களிடம் விளக்கம் பெறப்படும். மேலும் பாஸ்போர்ட் பெற வழிமுறைகள் குறித்து மதுரை ரேஸ்கோர்ஸ் மண்டல அலுவலக விழிப்புணர்வு மையத்தை வேலைநாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

    No comments: