Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 4, 2015

    கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா...?

    1. அலைபேசியை இடதுபுற காதில் வைத்து பேசுவது தான் நல்லது.


    2. சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால் அப்படியே எடுத்து பேசுதல் கூடாது. அதுவே சைனா மொபைல் என்றால் ஆபத்து அருகில்.


    3. மொபைலில் கடைசி ஒரு புள்ளி சார்ஜ் இருக்கும் போது பேசுவது கூடாது. ஏனென்றால் அப்போதுதான் ரேடியேசன் அதிகம் இருக்கும். கதிர்வீச்சு பாதிப்பு மிகுதியாக இருக்கும். 4. ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்து விட்டு மொபைலில் பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்திவிடும்.

    5. மொபைலில் அழைப்பு வரும் போது தான்ரேடியேஷனும் இருக்கும். ரிங் ஒசையை விட வைப்ரேட் மோடில் வைத்து இருப்பது அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தும். சைலன்ட் மோடும் ஆபத்து விளைக்க கூடியது தான்.

    6. சட்டைப் பையில் வைப்பதை விட பேன்ட் பாக்கெட்டில் மொபைலை வைத்துக் கொள்ள வேண்டும்.

    7. நீங்கள் உபயோகிக்கும் மொபைலில் பேசும் போது காதின் பக்கம் சூடாகிக் கொண்டே போனால் அந்த மொபைலை கை கழுவி விடுதல் நல்லது.

    8. ஸ்மார்ட் மொபைலில் ரேடியேஷன் குறைப்பதற்கான கருவிகள் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும்.

    9. குழந்தைகளிடம் மொபைலை கொடுத்து பேச வைத்தல். அதனை பார்த்து ரசித்தல் கூடவே கூடாது.

    10. எந்த நேரமும் மொபைலில் பேசி கொண்டே இருப்பதும் நரம்பு மண்டலத்தை தாக்கும். தலைவலி அடிக்கடி வரும் இதுவே அதன் அறிகுறி.

    11. பெண்கள் மொபைலை தனியாக ஒரு உறையில் வைத்து கைப்பையில் வைத்துக் கொள்ளுதல் நல்லது.

    12. பெண்கள், மாணவியர் தங்கள் மொபைல் எண்களை அறிமுகமில்லாதவர்களிடம் கொடுக்க கூடாது. உயர்கல்வி பயிலும் மாணவியர் முகநூல், வாட்ஸ் அப்பில் உறுப்பினராகி கல்வியையும், வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்ள கூடாது.

    13. பொதுவாக பெயருடன் வரும் அழைப்புகளை மட்டுமே பேசுதல் பெண்களுக்கு நல்லது. அறிமுகம் இல்லாத அழைப்புகள், மிஸ்டு கால்களை எடுத்துப் பேசாமல் இருப்பது நல்லது.

    14. வாடகை பெரிதாக கிடைக்கும் என எண்ணி நமது வீட்டு மாடிகளில் டவர் அமைக்க அனுமதிக்க கூடாது. குறிப்பிட்ட சுற்றளவில் ரேடியேஷன் அதிகமாக இருக்கும். டவர் அமைந்துள்ள வீட்டின் கீழேயும் ரேடியேஷன் அதிகமாக இருக்கும். கேன்சர் போன்ற நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.

    2 comments:

    Sun said...

    1,3,5,14 க்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. மற்றவை பயனுள்ள தகவல்கள்

    Anonymous said...

    very useful message......thank u