அரசு சம்பளம் பெறும் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் வருமான வரி செலுத்த வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் உள்ள அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், ஆசிரியர்களாக பணியாற்றும் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் வருமான வரி செலுத்த வேண்டும்.
அவர்களுக்கான, வருமான வரியைசம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் என, அம்மாநில கருவூலத்துறைக்கு, வருமான வரித்துறையினர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து, பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும், கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், தாங்கள் மதம் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவதால், தங்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, கோரி இருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் பிறப்பித்த உத்தரவு: அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும், அரசு சம்பளம் பெறுகின்றனர். எனவே, அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியது கட்டாயம். அதேநேரத்தில், பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் சம்பளம், அவர்கள் சார்ந்த ஒரு மத அமைப்புக்கு செல்வதாக இருந்தால், அந்த அமைப்பானது, ஒவ்வொரு தனி நபர்களும் பெறும் சம்பளத்தின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வருமான வரியை செலுத்த வேண்டும். பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் சார்ந்த மத அமைப்பு, வருமான வரியை செலுத்த வேண்டும் எனில், இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment