தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற கோரி ஏப்ரல் 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.
மாநில தலைவர் பழனிசாமி கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 15ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 42 ஆயிரம் சத்துணவு மையங்களையும் இழுத்துமூடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
No comments:
Post a Comment