நடந்து முடிந்த 15-வது சட்டசபைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர் மறைந்த.திரு.சீனிவேல். இவர் தேர்தல் முடிவுகள் வெளிவந்த மே மாதம் (17.05.2016) திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 25.05.2016-ல் உயிரிழந்தார்.
இதனால் 25.05.2016-ல் கூடிய 15வது சட்டசபையில், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்ற நிகழ்வில் சீனிவேலு பதவியேற்கவில்லை.
எனினும் விதிகளின்படி, 25.05.2016 முதல் இவரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகவல் TNPTF-ன் திண்டுக்கல் மாவட்டத் துணைச் செயலாளர் திரு.எங்கெல்ஸ் RTI-ல் பெற்ற கடிதத்தின் வழி அறியலாகிறது.
16.05.2016 : தேர்தலில் வேட்பாளர்
17.05.2016 : மருத்துவமனையில் அனுமதி
19.05.2016 : தேர்தல் முடிவில் வெற்றி
25.05.2016 : மருத்துவமனையில் மரணம்
25.05.2016 : பதவியேற்கவில்லை.
சட்ட மன்ற உறுப்பினராகத் தாம் வெற்றி பெற்றதே அறியாமல், பதவி ஏற்பிற்கு முன்னதாகவே மரணித்து, ஒரு நிமிடம் கூட தன் பணியில் சேர இயலாத ச.ம.உ-வின் வாரிசிற்கு வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் வழங்கிட சட்ட விதிகளில் இடமிருக்கையில்,
30 ஆண்டுகளாக முழுமையாகப் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறும் அரசு ஊழியனையோ CPS-ல் பங்காளியாக்கி ஓய்வூதியம் வழங்க வழிவகையே இல்லாத நிலைக்கு அரசு தள்ளியுள்ளது, அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய ஆளும் அரசு தேர்தல் பரப்புரை வாக்குறுதியின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக இரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழகத்தில் தொடர வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment