அங்கீகாரமற்ற மற்றும் படிப்புகளை பெயர் மாற்றம் செய்து நடத்தும் நர்சிங் பள்ளிகள் மீது, தமிழக நர்சிங் கவுன்சில் உறுதியான நடவடிக்கை எடுக்காததால் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த ஜூனில் கவுன்சில் நடத்திய ஆய்வில், மாநிலம் முழுவதும் 1800 போலி நர்சிங் பள்ளிகள் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
கவுன்சிலின் நடவடிக்கையால் அவற்றில் 50க்கும் மேற்பட்ட நர்சிங் பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால், நடவடிக்கையை தொடராமல் கிடப்பில் போட்டதால், மீண்டும் போலி நர்சிங் பள்ளிகள் முளைக்க துவங்கிஉள்ளன.பி.எஸ்சி., நர்சிங் (4 ஆண்டுகள்), டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங் அண்ட் மிட்வைபரி(3 ஆண்டுகள்), டிப்ளமோ இன் ஆக்சிலரி நர்ஸ் மிட்வைப் (2 ஆண்டுகள்), ெஹல்த் விசிட்டர் (6 மாதங்கள்) போன்ற சில படிப்புகளுக்கு மட்டுமே நர்சிங் கவுன்சில் அங்கீகாரம் அளிக்கிறது.போலி நர்சிங் பள்ளிகள் மீது நர்சிங் கவுன்சில் நடவடிக்கை எடுக்க துவங்கியதும், அவை தாங்கள் நடத்திய 'டிப்ளமோ நர்சிங்' உள்ளிட்ட படிப்புகளின் பெயரை 'அசிஸ்டென்ட்ஸ்', 'வொர்க்கர்' என மாற்றி தொடர்ந்து நடத்தி வருகின்றன. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடத்தப்படும் சில படிப்புகள் கூட இதுபோல் பெயர் மாற்றப்பட்டு நடத்தப்படுகின்றன.நர்சிங் கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல லட்சங்கள் வரை செலவு செய்து, போலி படிப்புகளை படித்தவர்கள் அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளில் சேர முடியாது. நர்சிங் பள்ளிகளில் நடத்தப்படும் படிப்புகள்
அங்கீகாரம் பெற்றவையா என www.tamilnadunursingcouncil.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம், என்றார்.
No comments:
Post a Comment