மின் வாரியம், ஊழியர்கள் நியமனத்துக்கு நடத்திய, எழுத்து தேர்வு மதிப்பெண்ணை, இன்று வெளியிடுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு: மின் வாரியத்தில், இளநிலை உதவியாளர், ஸ்டெனோ, வேதியர், டைப்பிஸ்ட், உதவி வரைவாளர் என, 750 காலி பணியிடங்களை நிரப்ப, ஜூன், 19 மற்றும் ஆக., 27, 28ல், அண்ணா பல்கலை மூலம், எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.
இதன் மதிப்பெண்கள், இன்று வெளியிடப்பட உள்ளன. தேர்வர்கள், www.tangedcodirectrecruitment.in என்ற இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். அரசு நிர்ணயம் செய்துள்ள இன,இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தின் அடிப்படையில், நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நவ., 2 முதல் நேர்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தேதி, இடம், நேரம் போன்ற விபரங்கள், பின்னர் இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.
எழுத்து தேர்வுக்கு, 85 சதவீதம்; நேர்முக தேர்வுக்கு, 15 சதவீதம்; அதாவது, 10 மதிப்பெண் நேர்காணலுக்கு, 5மதிப்பெண் கல்வி தகுதிக்கு என, கணக்கீடு செய்து, நியமனம் செய்யப்படுவர். மதிப்பெண் குறித்த விபரங்களுக்கு, 044 - 2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின், இடைக்கால தடை உத்தரவு நீக்கம் செய்யப்பட்ட பின், 525 தொழில்நுட்ப உதவியாளர்கள்; 900 கள உதவியாளர் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment