உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு, இன்று நடக்கிறது.அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு, இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கி, பகல், 1:00 மணிக்கு முடிகிறது. தேர்வுக்கு, 48 ஆயிரத்து, 286 பேர் விண்ணப்பித்தனர்; 2,336 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன; மீதமுள்ள, 45 ஆயிரத்து, 950 பேர், இன்று தேர்வில் பங்கேற்கின்றனர்.
தமிழகம் முழுவதும், 11 மாவட்டங்களில், 113 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு, 2014ம் ஆண்டு அறிவிக்கைபடி விண்ணப்பித்த பலருக்கு, 'ஹால் டிக்கெட்' வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஆனால், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தவிர, மற்ற அனைவருக்கும், ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதாக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment