Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 5, 2016

    அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு

    அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில் இலவச இணையதள வசதியுடன் லேப்டாப் வழங்கப்படும். 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம். இலவச மொபைல்போன் வழங்கப்படும் எனவும், மகளிர் இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் எனவும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரம்:
    *அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் பயிர்க்கடன்: அ.தி.மு.க.,
    * விவசாயிகளுக்கு முழுக்கடன் மானியம
    *காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை முழுவதுமாக செயல்படுத்த நடவடிக்கை
    *முல்லைப்பெரியாறில் 152 அடி உயர்த்த நடவடிக்கை

    *அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும்
    *தமிழகத்தில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி கிடையாது
    *மீனவர்களுக்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரம்
    *மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்
    * வணிகர் நலனுக்கு அரசு வழங்கும் தொகுப்பு நிதி ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்
    *வியாபாரிகள் எவ்வத இடையூறும் உள்ளாகாமல் வியாபாரம் செய்ய நடவடிக்கை
    *பத்திரப்பதிவு வழிகாட்டு மதிப்பு சீரமைக்கப்படும்
    *பத்திர பதிவு எளிமைபடுத்தப்படும் 
    * மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை
    * ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை
    *தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
    *மகப்பேறுஉதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்
    * 100 யூனிட் மின்சாரத்திற்க கட்டணமில்லை: அ.தி.மு.க.,
    *பொங்கல் திருநாளுக்கு கோ ஆப்டெக்சில் ரூ.500 கூப்பன்
    *வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும்: அ.தி.மு.க.
    *வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு
    *100 யூனிட் மின்சாரத்திற்கு இலவச மின்சாரம்
    * இலவச இணையதளத்துடன் மின்சாரம்
    *பொங்கல் பண்டிகைக்கு கோ ஆப்டெக்சில் துணிகள் வாங்க ரூ.500 கூப்பன்
    *அரசின் அனைத்து சேவைகளை பெற ஏழை எளிய மக்களுக்கு அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும்
    * மகளிர் இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும்
    *வழக்கறிஞர் சேமநல நிதி ரூ. 7 லட்சமாக உயர்த்தப்படும்
    *தமிழக அரசு பணியாளர்கள் சம்பள விகிதம் மாற்றியமைக்கப்படும்
    *மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதமாக உயர்த்தப்படும்
    *புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும்
    *ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தாஅமைக்கப்படும்
    *புதிய சாலைகள் அமைப்பதோடு, சாலைகள் அகலப்படுத்தப்படும்
    *பிற்படுத்தப்பட்டோர் தொழில் துவங்க குறைந்த வட்டியில் கடன் உதவி
    * அரசு கேபிள் டிவி பயன்படுத்தவோருக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும்
    * பஸ் ஸ்டாண்டு, பூங்காக்களில் இலவச ஓய் பை வசதி
    * சர்ச், மசூதிகளுக்கு பராமரிப்புக்கு தேவையான நிதி வழங்கப்படும்
    * எல்லா ரேசன்கார்டுகளுக்கும் இலசவ மொபைல் போன் வழங்கப்படும்: அ.தி.மு.க.,
    * திருமண உதவி திட்டத்தில் 4 கிராம் தங்கம் 8 கிராம் தங்கமாக உயர்த்தப்படும்
    * அங்கன்வாடி மையங்களுக்கு கேஸ், குக்கர் வழங்கப்படும்
    * தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும்
    * மகளிருக்கு ஓட்டுநர் பயற்சி அளித்து ஆட்டோ வாங்க மானியம்
    * ஆவின் பால் ஒரு லிட்டர் ரூ.25 என்ற விலையில் வழங்கப்படும்
    * மதுவிலக்கு படிப்படியாக அமைக்கப்பட்டு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்
    * சர்க்கரை ஆலை லாபத்தில் இயங்கவும், விவசாயிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை
    *அம்மா குடிநீர் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்
    *தாது மணல் விற்பனை அரசே ஏற்கும்
    * அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்
    * 15 லட்சம் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்

    No comments: